மரண அறிவித்தல் (Obituary)

திரு இராமநாதன் தியாகராஜா

தாய் மடியில் : 12, Mar 1954 — இறைவன் அடியில் : 24, Jan 2017
பிறந்த இடம்
காரைநகர் |
வாழ்ந்த இடம்
கொக்குவில்
திரு இராமநாதன் தியாகராஜா
(முகாமையாளர்- முத்துப்பிள்ளையார் வண்ணச்சோலை, கிளிநொச்சி)

காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கருவேலடி மணியகாரன் லேனை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் தியாகராஜா அவர்கள் 24-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், கல்கமுவா பரமநாதன் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஐங்கரன், மஞ்சுளா, நிரஞ்சன், திவாகரன்(லண்டன்), கயன்(உரிமையாளர்- கற்பக விநாயகர் ஸ்ரோர்ஸ், தட்டாதெரு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், கிருஸ்ணதாசன், கிருஸ்ணகுமார், கிருஸ்ணரூபன், காலஞ்சென்ற சாந்தகுமாரி, மீனகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773769386
தகவல்மனைவி, பிள்ளைகள்

இரங்கல் செய்தியை தெரிவிக்க.